ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் புதன்கிழமை கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார்.
சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ” உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன், 106 நாட்களுக்குப் பிறகு நான் வெளியேறி சுதந்திரக் காற்றை சுவாசித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ப.சிதம்பரம் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு திகார் சிறையில் இருந்து வெளியேறினார். அவர் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார் .
உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…