நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

Default Image

நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் வெளியிட்டதற்கு வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரித்துள்ளார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை குறிக்கும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்,பகத் சிங், விநாயக் தாமோதர் சாவர்க்கர் ,நரசிம்மராவ் உள்ளிட்டோரின் படங்கள் உள்ளன, ஆனால் அதில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் படம் இடம்பெறவில்லை.

இதனையடுத்து,நேரு அவர்களின் புகைப்படத்தை தவிர்த்ததற்காக,மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

மேலும்,இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , “இந்திய சுதந்திரத்தின் முன்னோடி குரலான ஜவஹர்லால் நேரு அவர்களை தவிர்த்து சுதந்திர தினத்தை கொண்டாடுவது அற்பமானது மட்டுமல்ல,வரலாற்றுக்கு மாறானது.ICHR தன்னை அவமானப்படுத்த இன்னும் ஒரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகி வருகிறது” என தெரிவித்தார்.

இந்நிலையில்,நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் வெளியிட்டதற்கு வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாகஅவர் கூறியதாவது:

மோட்டார் காரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஃபோர்டு மற்றும் உலகின் முதல் விமானத்தை உருவாக்கி பறக்க வைத்தவர்கள் ரைட் சகோதரர்கள்.

மோட்டார் கார் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது அவர் ஹென்றி ஃபோர்டை தவிர்த்துவிடுவாரா? அல்லது விமானம் கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை கொண்டாடும்போது ரைட் சகோதரர்கள் படங்கள் புறக்கணிக்கக்கப்படுமா? அல்லது அவர் இந்திய அறிவியலைக் கொண்டாடினால், அவர் சிவி ராமனைத் தவிர்ப்பாரா?,என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முதல் டிஜிட்டல் போஸ்டரில் இருந்து ஜவஹர்லால் நேருவை தவிர்த்ததற்கு ஐசிஎச்ஆர் உறுப்பினர்-செயலாளர் விளக்கம் கேளிக்குரியது”,என்று தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap