டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.
கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 140-க்கு மேற்பட்டோர் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் சிகிக்சை பெற்றுவந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் 2 மணிநேரத்திற்கு மட்டுமே ஆக்ஸிஜன் உள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025