கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு!
கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கரைபுரளும் யமுனை நதி தூய்மையாக மாறியுள்ளது. தொழில்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நதியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுகிறது.
இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா வளர்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காரணமாக கங்கை நதியின் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் எடுக்கப்பட்ட அளவை விட, ஜூன் மாதத்தில் ஆக்சிஜன் அளவு பெருகியுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், யமுனை நதி மாசடைவதற்கு கழிவுநீர் ஒரு முக்கிய காரணமாக உள்ளதாக கூறுகின்றனர்.