#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..!
ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
பல மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கிடையில், மஹாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் லீக்கானது.
இந்த சம்பவத்தில் 11 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் அளித்துள்ளார். ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி ஆக்ஸிஜன் கசிந்ததால் ஆயிரக்கணக்கான லிட்டர் ஆக்ஸிஜன் வீணானது. ஜாகிர் உசேன் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது 131 நோயாளிகள் உள்ளனர்.
அவர்களில் நான்கு முதல் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் தொட்டியில் இருந்து கசிவு ஏற்படுவதைத் தடுக்க மருத்துவமனை நிர்வாகத்தால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.