கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 மணி நேரத்தில் மட்டும் 6 நோயாளிகள் உயிரிழப்பு
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தம் அம்மாநிலத்தில் 6 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் தான் பரவியுள்ளது. அதேபோல கர்நாடகாவில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் நெருக்கடிகளும் தற்போது அதிகம் காணப்படுகிறது. நிலையில் கர்நாடக மாநிலத்தில் உளள பெங்களூரில்உள்ள ஆர்கா மருத்துவமனையில் இன்று அதிகாலை இரண்டு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கர்நாடக முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் ஆறு பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளில் தங்களிடம் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றக் கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் கிடைத்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால் நோயாளிகள் குணம் ஆகும் வரையில் அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜனை செலுத்த முடியாமல் போய் விடுகிறது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கவலை தெரிவித்துள்ளனர்.