வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட மறுக்கும் மக்களின் அலட்சிய போக்கு தான், அதிகளாவிலான தொற்று பரவுவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக, ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் பற்றாகுறை காணப்படுகிறது.
அஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் வேதனைக்குரிய செய்தியாக காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், http://delhi.gov.in விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் கொரோனா பரிசோனை செய்யப்பட்ட நேர்மறை சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…