ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வெற்றி ! இந்தியாவில் சோதனை செய்ய அனுமதி கோரவுள்ள நிறுவனம்

Default Image

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய அனுமதி கோரவுள்ளது  சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி,இங்கிலாந்து  உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தினார்கள்.  தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெரும் என பிரிட்டன் அரசுக்கு நம்பிக்கை இருந்த நிலையில், 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிலையில் புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில் ,கொரோனா சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது . நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.தற்போதைய நிலவரப்படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் பரிசோதனை நடத்த ஒரு வாரத்துக்குள் விண்ணப்பம் செய்வோம்.அனுமதி அளித்த பின் இந்தியாவில் தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்கத் தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்