ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் முதலில் வெளி வர வாய்ப்பு.?
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ இந்தியாவில் முதலில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.
சீரம் நிறுவனத்திற்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி வெளிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று நம்புகிறது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து மருந்து சீராக்கி ஒப்புதல் அளித்தவுடன், கொரோனா தடுப்பூசி குறித்த நிபுணர் குழு அதன் கூட்டத்தை நடத்தி வெளிநாட்டிலும் இந்தியாவிலும் நடத்தப்படும் மருத்துவ மதிப்பீடுகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை முழுமையாக ஆய்வு செய்து எந்தவொரு அவசர அங்கீகாரத்தையும் வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ‘கோவிஷீல்ட்’ இந்தியாவில் முதன்முதலில் வெளியிடப்படும்” என்று ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) கடந்த வாரம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டிசிஜிஐ) தேவைப்படும் சில கூடுதல் தரவுகளையும் சமர்ப்பித்தள்ளது.