மிஸ்டர் கான் ஒங்க வேலைய மட்டும் பாருங்க..கன்னத்தில் ஓங்கி அரையாத குறையாக-ஓவைசி கொதிப்பு

Default Image

 

  • பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவின் உண்மை அம்பலம்
  • இந்திய முஸ்லீம்களை பற்றி  இம்ரான்கான் ஆகிய நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஓவைசி தாக்கு.

 

பாகிஸ்தான் பிரதமராக இருப்பவர் இம்ரான்கான் இவர் அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில்  உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்திய அரசை சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்த வீடியோவானது அதிகளவு பார்க்கப்பட்ட நிலையில் வீடியோ குறித்து உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்தனர்.மேலும் வீடியோவின் உண்மைத் தன்மை ஆராய்ந்த நிலையில் அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாக்கி., பிரதமர் இம்ரான் கான் பதவிட்ட அந்த வீடியோக்கள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும்.வங்க தேசத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் வீடியோவை இந்தியாவில் நடந்து போல் சித்தரித்து இப்படி பதிவிட்டுள்ள பிரதமர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா..? என்று இம்ரான்கானை நோக்கி விமர்சனங்கள் பறந்த நிலையில் போலியாக பதிவிட்ட  அந்த வீடியோக்களை எல்லாம் தனது ட்விட்டரில் இருந்து நீக்கினார்.இந்த சம்பவம் குறித்து இந்திய தலைவர்கள்  இம்ரான்கானுக்கு தங்களுடைய கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மக்களவை எம்பி ஓவைசி  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று  பாகிஸ்தான் பிரதமரை கடுமையாக விமர்சித்தார்.அதில் ஓவைசி பேசுகையில் இந்திய முஸ்லீம்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம், உங்களுடைய நாட்டைப் பற்றி மட்டும் கவலைப்படுங்கள் மேலும் ஜின்னாவின் தவறான கொள்கைகளை நிராகரித்துவிட்டோம். நாங்கள் இந்திய முஸ்லீம்களாக இருப்பதையே பெருமையாக கருதுகிறோம் என்று தெரிவித்தார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்