மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓவைசி அறிவிப்பு!

வரப்போகின்ற மேற்குவங்க தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் போட்டியிடப்போவதாக முஸ்லிம் தலைவர்களின் சந்திப்புக்கு பின்பதாக கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வருகிற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த முறையாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் நடைபெற்ற தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையே அடிக்கடி பரபரப்பான வாதங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் கூறுகையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளை கலைக்க பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஓவைசியை பணத்தால் வாங்குவதற்கு யாரும் இல்லை எனவும், மம்தாவின் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய் சேரும் பொழுது அவர் தான் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நகரில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசிய ஓவைசி செய்தியாளர்களிடம் பேசுகையில், வரப்போகும் மேற்கு வாங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025