அசாமில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை…! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…!
அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
இதுகுறித்து,சதீந்திர மோகன் தேவ் சிவில் மருத்துவமனையின் டாக்டர் ஹனிஃப் எம்.டி.அப்சர் ஆலம் லாஸ்கர் கூறுகையில், இப்பெண்ணுக்கு தாமதாமாக பிரசவம் நடைபெற்றுள்ளது. இதுவரை அசாமில் பிறந்த மிகப் பெரிய குழந்தை. அசாமில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சராசரி எடை சுமார் 2.5 கிலோகிராம் ஆகும். கடந்த காலத்தில் 4 கிலோகிராம் எடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இருந்தனர், ஆனால் இக்குழந்தை தான் 5.2 கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பெண் கொரோனா தொற்று பயத்தினால், மருத்துவாமனைக்கு வரமால் தாமதித்துள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தின் 38 முதல் 42 வது வாரங்களுக்கு இடையில் பிரசவம் நடைபெறும். 42 வது வாரத்திற்குள் குழந்தைகள் வராதபோது, அவை பிந்தைய கால அல்லது தாமதமான பிரசவமாக கருதப்படுகின்றன.
குழந்தையின், தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தாமதமாகி உள்ளது. அவரது பிரசவ தேதி மே-29 கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவரது குடும்பத்தினர் தொற்றுநோய்களுக்கு மத்தியில் மருத்துவமனைகளுக்கு செல்ல தயங்கினர். அதிர்ஷ்டவசமாக நாங்கள் தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் காப்பாற்ற முடிந்தது என தெரிவித்துள்ளார்.