வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க பரிந்துரை.!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது பற்றி சட்ட அமைச்சகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. புதிய முறைப்படி தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் லிங்கில் வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த பரிந்துரை கடந்த மாதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாரம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.