நேற்று ஒரே நாளில் 231.6 கோடிக்கு மது விற்பனை .!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், 40 நாள்களாக மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மத்திய அரசு மதுக்கடை திறக்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். கர்நாடக மாநிலத்தில் 3 வது நாளான நேற்று மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.
நேற்று மட்டும் 7 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 39 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் ரூ.45 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.197 கோடிக்கும், நேற்று ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025