ஆட்கொல்லி கொரோனா..! இந்தியா முழுவதும் 28,529 பேர் கண்காணிப்பு..! மத்திய சுகாதாரத்துறை மந்திரி ..!
இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் கொரோனா வைரஸ் குறித்த பேசினார். அதில் ,உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்பே ஜனவரி 17 -ம் தேதி முதல் இந்தியா தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் மார்ச் 4 -ம் தேதி ( நேற்றுவரை ) 29 பேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் 4 -ம் தேதி வரை மொத்தம் 28529 நபர்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.