இந்தியாவில் இது வரை 23,28,779 பேருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் இது வரை 23,28,779 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 12-வது நாளான நேற்று 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.அதாவது,கொரோனா தடுப்பு மருந்தை இது வரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.
41,599 முகாம்களில் 23,28,779 சுகாதார பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை 6 மணி வரை 5,308 முகாம்கள் நடைபெற்றது.12 -ஆம் நாளான நேற்று நாடு முழுவதும் 2,99,299 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் 4,316 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பு மருந்தின் காரணமாக இது வரை எந்தவிதமான தீவிர பாதிப்பு/உபாதைகள்/இறப்பு ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025