மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கடந்த இரண்டரை மாதங்களில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைப்பற்றியது.
மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து ₹16 லட்சம் அபராதமும் வசூலித்துள்ளது.
தடை செய்யப்பட்ட அதாவது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான இயக்கம் ஜூலை 1 முதல் மும்பை சிவில் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.