கடந்த இரண்டு மாதங்களில் இணையவழி தாக்குதல் 200% அதிகரிப்பு .!

Default Image

இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா தடைவிதித்தது.இதனால் சீனா, இந்தியா மீது இணையவழி தாக்குதலை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பான பதிலளித்த பிரதமர் அலுவலகத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி குல்சான் ராய், கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இணையவழி தாக்குதல்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன.

ரோந்து புள்ளி 14 -லிருந்து சீனா அனைத்து போர் வாகனங்களையும், கட்டமைப்புகளையும் நீக்கிய சீனா.!

ஆனால் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக இணையவழி தாக்குதல்கள் அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஃபிஷிங் மற்றும் ransomware போன்ற பெரிய வழக்குகள் அதிகரித்துள்ளன.

இந்த வழக்குகள் இந்தியா, சீனா பதட்டங்கள் காரணமாக மட்டுமல்ல கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகரித்துள்ளன. ஏனெனில் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் காரணமாக  அதிகரித்துள்ளது  என்று அவர் கூறினார். அலுவலகங்களில் பொதுவாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன எனவும் மேலும் மக்கள் பதிவிறக்குவது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்