கோ-வின் போர்ட்டல் செயலியில் வெறும் 2 நாளில் 2.28 கோடிக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு – மத்திய சுகாதார அமைச்சகம்!
நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதி மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை 2.28 கோடிக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3ம் கட்ட தடுப்பூசி போடும் பணி மே ஒன்றாம் தேதி தொடங்கப்பட உள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 முதல் 45 வயதான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு கோ-வின் போர்ட்டல் செயலியில் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நேற்று இரவு 8 மணி வரை நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 3ஆம் கட்ட தடுப்பூசி கோ-வின் போர்ட்டல் செயலியில் மொத்தம் வெறும் 2 நாட்களில் மட்டும் 2.28 கோடி முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.