ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை தலைகீழாக தொங்கவிட்டு அவரது தாடியை எடுப்பேன் என பாஜ., எம்பி எல்லைமீறி பேச்சு…

Default Image
  • தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநிலம்  ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
  • இந்நிலையில் இவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,யான அர்விந்த்  கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது,  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக  ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் சகோதரரை, உங்கள் சமூகத்தை சேர்ந்த கயவர்களாலே பல முறை குத்தப்பட்டு, துப்பாக்கியால்  சுடப்பட்டார். இதற்காக இப்போது வரை உங்கள் சகோதரர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி இருக்கையில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாரதிய ஜனதாவை அச்சுறுத்துகிறாரா? ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி நிஜாமாபாத்தில் உள்ள இட்கா மைதானத்தில்  பல கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

Image result for aimim party against bjp mp arvind

அதே மைதானத்தில், நான் ஒரு கிரேன் கொண்டு வந்து, ஓவைசியை தலைகீழாகத் தொங்கவிட்டு, அவரின் தாடியை  எடுப்பேன் என சற்று காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், தெலுங்கானா முதல்வரின் மகன் ராமா ராவ், ஒரு நாத்திகர் என்றும்,  இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? இவர்கள் எப்படி  மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாரதிய ஜனதா கட்சி  பின்வாங்காது என்றும், வரும் காலத்தில்,நாட்டுக்கு தேவையான  அதிகமான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்