இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா 690, தமிழ்நாடு 571, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314 ஆகிய மாநிலங்கள் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் முகமூடி அணிவது ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கட்டாயமாக்கியுள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் முகமூடி இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்” என்று கஞ்சம் மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலங்கே கூறினார்.
மேலும் மூக்கு மற்றும் வாயை மறைக்க பருத்தி துணி முகமூடி, கைக்குட்டை அல்லது தாவணியைப் பயன்படுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா குலங்கே கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…