ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் இயங்கவுள்ள வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு.
கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ள காரணத்தால், நாளை முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு திறக்கப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில், 44 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை இவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும் என்றும், இந்நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஜிப்மர் மருத்துவமனை வரும் மே 8-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இச்சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும் என்றும், சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்ந நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின் தான் மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை -சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[நவம்பர் 11] எபிசோடில் விஜயா சத்யா மீது உள்ள கேஸை வாபஸ் வாங்க சம்மதித்தார்.…
வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில்…
சென்னை : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி…
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு காலமான அவரது…
யாழ்ப்பாணம் : இலங்கையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டில் அதிபருக்கு தான் அதிக…
சென்னை : நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.…