ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் இயங்கவுள்ள வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு!

Default Image

ஜிப்மர் மருத்துவமனையில் நாளை முதல் இயங்கவுள்ள வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு.

கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கடந்த ஒரு  மாத காலமாக மூடப்பட்டிருந்தது. தற்போது வைரஸ் தொற்று  குறைந்துள்ள காரணத்தால், நாளை முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு திறக்கப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில், 44 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை இவர்களுக்கு வைரஸ் தொற்று  இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும்  என்றும், இந்நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஜிப்மர் மருத்துவமனை வரும் மே 8-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இச்சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும் என்றும், சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்ந நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின் தான் மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital
amazon netflix
Hobart Hurricanes Women vs Adelaide Strikers Women
guindy hospital jayakumar
amaran ott