22 கோடி நபர்களில் 7 லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை.! அதிர வைத்த அதிகாரபூர்வ தகவல்.!
கடந்த 8ஆண்டுகளில் 22 கோடிபேர் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பித்ததில், 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்ற தகவலை மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
அரசு வேலை என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு வேலை. அதற்காக வருடக்கணக்கில் போராடி பலர் வெற்றியும் கண்டுள்ளனர்.
அப்படி 100-இல் எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று பார்த்தல் நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு தான் இருக்கிறது மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்.
அதாவது, கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை மத்திய அரசு பணிக்காக, 22 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில் விண்ணப்பித்தோரில் 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
அதாவது 100க்கு 1 சதவீதத்திற்கும் கீழே அதாவது 0.33 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. 10 ஆயிரம் பேரில் 33 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாம். இந்த தகவலை மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.