3 வேளைக்கு 5 மாதத்திற்கு தேவையான உணவு எங்கள் டிராக்டரில் உள்ளது – விவசாயி..!
சமீபத்தில் மக்களவை, மாநிலங்களவையில் வேளாண்சட்டங்களை எதிர்கட்சிகள் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியது. பின்னர், குடியரசுத் தலைவரும் இந்த வேளாண் சட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டமும் டத்தினர். இந்த சட்டங்களை திரும்பப்பெற கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் பேரணி நடத்தினர். அப்போது, ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். தடுப்பை மீறி விவசாயிகள் வந்ததால் , போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்தனர். காவல்துறையின் இந்த செயலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவிக்க,
சிங்கு எல்லை வழியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமத்திக்கப்பட்டது.
47 yr old Surjit, a wheat growing farmer, is walking to Delhi & is currently in Haryana’s Panipat. He tells me-
????’Our trucks have enough stock to do 3 langars daily for 5 months’
????’We’ve seen with other protests that sarkar doesn’t listen easily. Hence, we are mentally ready’
— Saahil Murli Menghani (@saahilmenghani) November 26, 2020
இந்நிலையில், செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விவசாயி ஒருவர், 3 வேளைக்கு 5 மாதத்திற்கு தேவையான உணவு எங்கள் டிராக்டரில் உள்ளது என தெரிவித்தார் என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லி சென்று போராட்டத்தை நடத்துவோம். இதற்காக விவசாயிகள் பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
என்ன நடந்தாலும் நாங்கள் டெல்லி செல்வோம் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.