வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்படும் இரு நாட்டு அச்சுறுத்தலை இந்தியா ஒரே நேரத்தில் முறியடிக்கும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் லடாக்கில் பகுதியில் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பின்னர் பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இரு தினங்களாக கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தானும் எல்லையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான், சீனா என இருநாடுகளையும் ஒரே நேரத்தில் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அமெரிக்க – இந்திய கூட்டணி மன்றத்தின் கூட்டத்தில் பேசிய அவர், வடக்கு எல்லைகளில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும்போது பாகிஸ்தான் அதை தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே இதுபோன்ற முயற்சிகளில் பாகிஸ்தான் வெற்றிபெறாமல் இருக்க நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியா தற்போது பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சீனாவிடமிருந்து முரட்டுத்தனமான நடவடிக்கைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இதை நம்மால் தக்க வழிகளில் கையாள முடியும். எந்தவொரு நேரத்துலும் நெருக்கடி ஏற்பட்டால் இந்திய பாதுகாப்பு படை சந்திக்க தயாராக இருக்கிறது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்தியா ஒருங்கிணைந்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இரு அச்சுறுத்தல்களையும் ஒரே நேரத்தில் இந்தியாவால் எதிர்கொள்ள முடியும் என்று பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இந்தியா அமைதியை விரும்புவதகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…