பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் : அகிலேஷ் யாதவ்..!

Default Image

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக, கூடுதலாக சில தொகுதிகளை கொடுத்தாவது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை தொடர்வோம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதிக் கட்சிகள் இணைந்து பா.ஜ.க வேட்பாளர்களை தோற்றகடித்தன.

இதையடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மெய்ன்பூரி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார். அதற்காக, பகுஜன் சமாஜ் கட்சிக்கு கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்கியாவது கூட்டணி அமைக்க உள்ளதாக அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்