நான் ஏன் ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்று கூறினேன்.? AIMIM தலைவர் ஒவைசி விளக்கம்.!
டெல்லி: இன்று மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற இரண்டாம் நாளில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் என பலர் பதவியேற்று கொண்டனர். அப்போது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதிராபாத் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார்.
ஒவைசி, உருது மொழியில் பதவி பிராமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, பின்னர் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். மேலும், தக்பீர் அல்லாஹு அக்பர் என்றும் தனது மத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அப்போது சில எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும் கோஷமிட்டதால் அவையில் சிறுது சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற நிகழ்வு முடிந்த பின்னர் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், மற்ற உறுப்பினர்களும் பலவிதமாக அவர்களுக்கு தோன்றியதை கூறினார்கள். நான் ‘ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று எனக்கு தோன்றியதை கூறினேன். அது எப்படி தவறாகும்.?
இப்படி சொல்ல கூடாது என அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்? அதேஎன்னிடம் கேட்டது போல மற்றவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். பாலஸ்தீனத்தைப் பற்றி மகாத்மா காந்தி கூறியதைப் படியுங்கள் என்று அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.