டெல்லியில் மற்ற மாநில டாக்சிகள் நுழைவதற்கு தடை..!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அதிகரித்து வரும் மாசுபாட்டால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதனை கட்டுப்படுத்த டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் மற்ற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட Uber ,OLA மற்றும் பிற ஆப்-அடிப்படையிலான வாகனங்கள் நுழைவதை டெல்லி அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, டெல்லியில் டிஎல் எண்ணுடன் கூடிய ஆப்-சார்ந்த வாகனங்கள் மட்டுமே இயங்கும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோபால் ராய் தெரிவித்தார்.
டெல்லி பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிப்பு:
காற்று மாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு டெல்லி அரசு குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை அனைத்து பள்ளிகளிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி அரசு பள்ளிகளில் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புககள் நடைபெற்றது. குளிர்கால விடுமுறை அறிவிப்புக்குப் பிறகு டெல்லியில் பள்ளிகள் நவம்பர் 18 வரை மூடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025