அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும், கடைகளை திறக்க நேரம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட கடைகள் இன்று முதல் திறந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதையடுத்து கிராமப்புறங்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்க கூடிய அனைத்து வகையான கடைகளும் திறந்து கொள்ளலாம் என்றும் நகர்ப்புறங்களில் வணிக வளாகம் மற்றும் மார்க்கெட் போன்ற அதிக கூட்டம் சேரும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து முழுமையான கடைகள், அக்கம் பக்க கடைகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காலத்தில் சிறு, குறு தொழில் செய்வோர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பிய நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் வராத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகள் திறந்து கொள்ளலாம். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் ஏரியாக்களில் செயல்படும் கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அதுவும், சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இந்த ஊரடங்கு தளர்வு நடைமுறை ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு பொருந்தாது. மதுபானக்கடைகளை பொறுத்தளவில் அந்தந்த மாநிலங்கள் வைரஸின் தாக்கத்தை பொறுத்தே நிர்வாகம் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்து அறிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…