ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்..! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து..
ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படங்களுக்கு டெல்லி முதல்வர் வாழ்த்து.
ஆஸ்கார் விருது பெற்ற “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” மற்றும் “ஆர்ஆர்ஆர்” திரைபடக்குழுவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கார் விருது ஆகும். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில், 95வது ஆஸ்கார் விருது விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற அருமையான பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றதற்கு திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது இந்திய திரையுலகிற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமையான தருணம் எனவும் கூறியுள்ளார்.
भारतीय फ़िल्म जगत के साथ पूरे देश के लिए ये गर्व का पल है। अपने शानदार गाने के लिए ऑस्कर अवॉर्ड जीतने पर RRR फ़िल्म की पूरी टीम को बधाई। https://t.co/DgSaWbYChh
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 13, 2023
அதே போல, சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றதற்காக “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” படத்தின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள் எனவும் கூறியுள்ளார்.
Huge congratulations to the entire team behind “The Elephant Whisperers” for winning the Oscar in the Best Documentary Short film category. You have made every Indian proud. https://t.co/wRlFd26aic
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 13, 2023