கொரோனா வைரஸை குணப்படுத்தும் Coronil மருந்தை வாங்க ‘OrderMe’ பயன்பாடு மிக விரைவில் வர வாய்ப்புள்ளது என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நேற்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு வெளிட்டார். பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “கொரோனில் மற்றும் ஸ்வாசரி” இந்த மருந்துகள் நாடு முழுவதும் 280 நோயாளிகளுக்கு சோதனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று பதஞ்சலியின் நிறுவனர் ராம்தேவ் கூறினார். இந்த மருந்து ரூ.545 விலையில் விற்கப்படுகிறது இது ஒரு வாரத்திற்குள் இந்தியா முழுவதும் விற்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் “OrderMe” என்ற புதிய பயன்பாட்டை பதஞ்சலி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் வீட்டிலிருந்தே கொரோனிலை ஆர்டர் செய்ய முடியும். மேலும் விரைவில் கொரோனா மருந்து OrderMe பயன்பாட்டில் கிடைக்கும் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளின் விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களை பார்க்கும் வரை விளம்பரம் செய்வதையோ அல்லது விளம்பரப்படுத்துவதையோ நிறுத்துமாறு அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருந்துகளின் கலவை, அதன் ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவமனைகள் நிறுவன விவரங்களை விரைவாக கொடுக்குமாறு மத்திய அரசு கேட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…