புதுச்சேரியில் கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் புதுச்சேரி அரசு திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை பரவலை சமாளிக்கும் வண்ணம் தனியார் மருத்துவமனையில் இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி அரியூரில் இருக்கும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில், கொரோனாவுக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் எக்ஸ் ரே, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றை கட்டாயப்படுத்தி எடுத்தும் அதற்கு கட்டணம் வசூலிக்கவும் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மருத்துவமனைகள் இலவசமாக மருத்துவம் அளிக்க உத்தரவு வழங்க கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில் வழக்கு பதிவு செய்தவர், புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவமனை முறையே எம்.என்.சுமதி, என்.மாலா, எல்.சுவாமிநாதன் ஆகிய வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவித்ததாவது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தொகையான ரூ.2.90 கோடியை வழங்க புதுச்சேரி அரசிற்கு பட்டியல் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில் தெரிவித்ததாவது, இந்த பட்டியலை சரிபார்த்து குறிப்பிட்டுள்ள தொகையை வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தெரிவித்ததாவது,
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற உத்தரவின்படி, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை அந்தந்த நபர்களுக்கு 3 மாதங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். அதேபோல் தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையும் சரிபார்த்து வழங்கவும் கூறி புதுச்சேரி அரசிற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…