உ.பி-யில் சட்டவிரோதமாக மதவழிபட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியை அகற்ற உத்தரவு…!
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே மத வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகள் தொடர்ந்து சர்ச்சை பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி சட்டவிரோதமாக முதல்வரின் உத்தரவின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மற்றும் இரைச்சல் வரம்பை மீறி அதிக அளவு ஒலி எழுப்பி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வருகிற 30ம் தேதிக்குள் இது தொடர்பான பட்டியலை தயாரித்து அனுப்புமாறு காவல் நிலையங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி பின், சட்டவிரோதமாக உள்ள ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.