#BREAKING: 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் ..!

Published by
murugan
  • மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது.
  • 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்கிறது.

நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி 18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 44 கோடி தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 25 கோடி கோவிஷீல்டு தடுப்பு ஊசி கொள்முதல் செய்கிறது. அதே போல பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்து 30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.

30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தி உள்ளது.  மூன்று நிறுவனங்களும் இருந்து கொள்முதல் செய்யும் 74 கோடி டோஸ்  மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை டிசம்பர் இறுதி வரை இரு நிறுவனங்களும் சப்ளை செய்யும். தடுப்பூசிக்கான 30 சதவீத தொகையை மத்திய  அரசு ஏற்கனவே வழங்கி விட்டதாக வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார். கார்டிவாக்ஸ் பெயரில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து அறிவியல் தரவுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன என தெரிவித்தார். 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று நேற்று மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

1 hour ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

2 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

4 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

4 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

5 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

5 hours ago