#BREAKING: 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் ..!
- மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது.
- 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்கிறது.
நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி 18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 44 கோடி தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 25 கோடி கோவிஷீல்டு தடுப்பு ஊசி கொள்முதல் செய்கிறது. அதே போல பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்து 30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தி உள்ளது. மூன்று நிறுவனங்களும் இருந்து கொள்முதல் செய்யும் 74 கோடி டோஸ் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை டிசம்பர் இறுதி வரை இரு நிறுவனங்களும் சப்ளை செய்யும். தடுப்பூசிக்கான 30 சதவீத தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டதாக வி.கே.பால் தகவல் தெரிவித்துள்ளார். கார்டிவாக்ஸ் பெயரில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து அறிவியல் தரவுகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன என தெரிவித்தார். 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று நேற்று மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.