தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை உயர்த்தி உத்தரவு..!
நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் செலவு தொகை ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டசபை தேர்தலுக்கு, 28 லட்சத்தில் இருந்து 40 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் எடுத்த முடிவின்படி, அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சம் வரையிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம்.
சட்டசபை தேர்தலுக்கான புதிய செலவு வரம்பு உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கு பொருந்தும் என மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.