ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப அவரிடம் ஒப்படைக்க உத்தரவு !
குரூஸ் ஷிப் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திரும்ப அவரிடம் ஒப்படைக்குமாறு சிறப்பு என்சிபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர் வெளிநாடு செல்லவும்,ஜாமீன் பத்திரத்தை ரத்து செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக ஆர்யன் கான் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி தேசிய போதைப் பொருள் தடுப்பு ஆணையம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.இந்நிலையில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.