டெல்லியில் கனமழை காரணமாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!
டெல்லியில் கனமழை காரணமாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் கனமழை பெய்து வருகிரது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் 24 மணி நேரத்தில் 13.8 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையில்,பருவமழை காலத்தில் இந்தாண்டில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.