மகாராஷ்டிராவில் பலத்த மழைக்காரணமாக ஆரஞ்சு அலர்ட் .!

கனமழை காரணமாக மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை மற்றும் தானே உள்ளிட்ட கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, இந்த நிலையில் ராடார், செயற்கைக்கோள் படங்கள், கொங்கன் கடற்கரையில் தீவிரமான மேகச் செயல்பாட்டைக் காட்டுகின்றன. குறிப்பாக மும்பை மற்றும் தானேவில் மிக அதிக அளவிலான மழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை மற்றும் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை வரை மும்பையில் மிகக்கனமழை பெய்யும் என்றும், இன்று ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்ட அங்கு அதிக முதல் மிக அதிக அளவிலான மழை பெய்யும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் பால்கரில், சுமார் 124 மிமீ மழை பதிவாகியுள்ளது, மும்பையின் கொலாபா பகுதியில் 25 மிமீ மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா விலும் 6 மிமீ முதல் 184 மிமீ மழை பதிவாகியுள்ளது, என்பது குறிப்பிடத் தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025