மும்பையில் இன்று விநாயகர் சதுர்த்தியை நகரம் கொண்டாடுவதால் ஐஎம்டி கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மும்பை, தானே மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் தானேவுக்கு நாளையும் கன மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 10 நாள் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மும்பை, பால்கர், தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு வார இறுதி நாட்களில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மகாராஷ்டிராவின் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டியின் மூத்த இயக்குனர் நேற்று தெரிவித்தார்.
மும்பையில் இன்று பிற்பகல் முதல் நகரம் முழுவதும் மேகமூட்டம் மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது என்று பிஎம்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஆகஸ்ட் 25 வரை வடக்கு மகாராஷ்டிராவில் கடலுக்கு செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…