பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளதை அடுத்து, அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தில் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா அணை கனமழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.
பம்பா அணையின் நீர்மட்டம் தற்போது 983.05 மீட்டராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையமானது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
984.5 மீட்டராக பம்பா அணையின் நீர்மட்டம் உயரும்போது பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டமானது விரைவில் 984 மீட்டராக உயரும் என கூறப்படுகிறது.
தொடர் மழையின் காரணமாக ஆலுவாவில் உள்ள சிவன் கோவிலின் ஒரு பகுதி மழைநீரால் மூழ்கியுள்ளது. திருசூர் மாவட்டம் மன்னுத்து பைபாஸில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர் கனமழை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பருவமழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டும்போது அணையில் இருந்து மதகுகளின் வழியாக வைகை அணைக்கு நீர் வெளியேற்றப்படும் எனவும், இதற்கான கோரிக்கையானது தமிழக அரசிடம் விடுக்கப்பட்டுள்ளது எனவும் கேரள முதல்வர் முன்னரே தெரிவித்திருந்தார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…