பரந்த காட்சிகள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வரலாற்றுச் சின்னங்கள், குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் அமைதியான மலைகள் இந்தியாவில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால், நீங்கள் அறிந்திராத சில புதிரான ஒளியியல் மாயைகளின் தாயகமாக இந்தியா உள்ளது.
ஐராவதேஸ்வரர் கோவில், தமிழ்நாடு
தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் பகுதியில் மறைந்திருக்கும் இக்கோயில் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள கைவினைத்திறன் மிகவும் அசாதாரணமானது. இது இந்தியாவின் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். இங்கே இரண்டு விலங்குகளின் சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளது. வலப்புறம் யானை, இடப்புறம் காளை என செதுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் எந்த மிருகத்தை முதலில் பார்த்தீர்கள்?
மேக்னடிக் ஹில், லே
ஏறக்குறைய அனைத்து பயணிகளுக்கும் லே ஒரு கனவு இடமாகும். கண்ணுக்கினிய காட்சிகள், சாகச சுற்றுலா தவிர, உங்கள் மனதை மயக்கும் இடமும் லேயில் உள்ளது. லே ஆஃப் மேக்னடிக் ஹில் 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் அதன் பெயருக்கு ஒரு அற்புதமான மர்மம் உள்ளது. இந்த மலை அனைத்து ஈர்ப்பு விதிகளையும் மீறுகிறது! இங்குள்ள வாகனங்கள் என்ஜின் அணைக்கப்பட்டவுடன் தானாகவே மேல்நோக்கி ஏறும் என்று கூறப்படுகிறது. இந்த மாயை பெரும்பாலும் ‘இமயமலை அதிசயம்’ என்று அழைக்கப்படுகிறது.
உண்மை என்னவென்றால் இந்த மலை ஒரு மாயையை உருவாக்கி கீழ்நோக்கிச் சரிவை மேல்நோக்கிச் சாய்வாகக் காட்டுகிறது. எனவே, வாகனங்கள் கீழே உருளும்போது மேலே செல்வது போல் தெரிகிறது.
அலேயா விளக்குகள், மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளத்தில் இருக்கும் ஒளியியல் மாயை அப்பகுதியில் உள்ள சில மீனவர்களை பயமுறுத்தியுள்ளது. இந்த இடத்தில் உள்ள ஆழமான சதுப்பு நிலங்களில் தோன்றும் அலேயா வெளிச்சம் பல திகிலூட்டும் கதைகளை கொண்டுள்ளன. இரவு நேரங்களில், இயற்கைக்கு மாறாக பல வித்தியாசமான வண்ணங்களில் ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், இந்த மாயை முற்றிலும் வேதியியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வினோதமான வெளிச்சம், மீத்தேன் அயனியாக்கத்தின் விளைவாகும். காடுகளின் சதுப்பு நிலங்களில் உள்ள அழுகும் பொருளின் மேல் உள்ள மீத்தேன் வாயு அயனியாக்கி ஒளியை வெளியிடுகிறது. எனவே, பாஸ்பைன், டைபாஸ்பேட் மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் ஆக்சிஜனேற்றம் தான் இங்குள்ள மக்களை அடிக்கடி பயமுறுத்துகிறது.
தாஜ்மஹால், உத்தரபிரதேசம்
தாஜ்மஹால் அன்பின் உருவகமாக உலகப் புகழ் பெற்றது. மேலும், அதன் கட்டிடக்கலை, மொசைக்ஸ் மற்றும் வெள்ளை பளிங்கு ஆகியவை இந்த இந்திய அதிசயத்தின் நன்கு அறியப்பட்ட அம்சங்களாகும். தாஜ்மஹாலின் ரெட்ஸ்டோன் வாயிலில் நுழையும் போது, பளிங்கு நினைவுச்சின்னம் பெரியதாக தோன்றலாம். ஆனால் உள்ளே செல்ல செல்ல சிறியதாக தோன்றும்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…