ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் புதிய அதிபராக மகிந்த ராசபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.இவரை தொடர்ந்து மகிந்த ராசபக்ச பிரதமராக பதவியேற்றார்.
இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராசபக்சவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மேலும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.பிரதமரின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்ச இன்று முதல் 3 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறார்.
கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வரும் நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதன் பின்பு வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…