பரபரப்பு.. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயிலுக்கு தீ வைப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகாரில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இத்திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் ராணுவ பணியில் சேர பயிற்சி பெற்று வருபவர்கள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
You don’t even deserve a government job if you’re going to destroy public property lawlessly!!#AgneepathScheme pic.twitter.com/n66ndbbVHE
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi) June 16, 2022