CBSE +12 தேர்வுக்கு எதிர்ப்பு.. வழக்கு ஒத்திவைப்பு..!

Default Image

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ-க்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தனர். தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு தொடர்பாக ஜூன் ஒன்றாம் தேதி தனது முடிவை சிபிஎஸ்இ அறிவிக்கக் கூடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்