வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.அவை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை மீண்டும் ஒத்திவைத்து சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…