மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி ராஜா, திமுகவை சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
குடியரசு தலைவரை சந்திப்பதற்கு முன்பாக எதிர்கட்சியினரை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதை ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.”பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் (வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள்) குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன் சர்ச்சைக்குரிய சட்டங்கள் குறித்து உட்கார்ந்து விவாதித்து கூட்டு நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக அரசாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும்.ஆனாலும் டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…