குடியுரிமை சட்டம் – குடியரசு தலைவருடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
- டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன்விளைவாக தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது..இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இதில் பலர் காயமடைந்தனர்.மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் எதிர்கட்சிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் காங்கிரஸ்,திமுக,திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.அப்பொழுது குடியுரிமை சட்ட திருத்தத்தால் நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து மனு அளித்தார்கள்.