எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை – மாயாவதி அறிவிப்பு

Mayawati

எதிர்க்கட்சிகளின் கரங்கள் மட்டும்தான் ஒன்றிணைந்துள்ளது, இதயம் இணையவில்லை மாயாவதி கருத்து.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அதன்படி, பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஓரணியில் போட்டியிட வைத்து, பாஜகவை வீழ்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் முதல், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதில் ஒரு பகுதியாகத்தான் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். இதில், 15 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கரங்கள் மட்டும்தான் ஒன்றிணைந்துள்ளது, இதயம் இணையவில்லை. பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான், எனவே காங்கிரஸ் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுபோன்று, பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக வெகுவாக பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடக்கும் கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்